பொது செய்தி

தமிழ்நாடு

வானுாரில் தொழிலாளர்கள் கருத்து கேட்பு கூட்டம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

மரக்காணம்; வானுார் மின்துறை சார்பில் சிறு, குறு தொழிலாளர்களிடம் குறை தீர்ப்பு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.வானுார் அடுத்த பூத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழிலாளர்களின் குறை தீர்ப்பு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் மின்துறை சார்பில் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தொழிற்சாலை உரிமையாளர் நலச்சங்க தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார்.உதவி செயற்பொறியாளர் தங்க மாரியப்பன்- முன்னிலை வகித்தார் உதவி இளநிலை பொறியாளர் சங்கர் நாராயணன், உதவி இளநிலை பொறியாளர் ஆதிமூலம் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பூத்துறை பகுதியில் 100க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு தினந்தேரும் மின் தடை ஏற்படுவதால் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடுகின்றது. 110 கே.வி., துணை மின் நிலையம் உடனடியாக அமைக்க வேண்டும். தொழிலாளர்களுடன் மின்துறை அதிகாரிகளும் சேர்ந்து வாட்ஸ்அப் குரூப் அமைத்து மின்நிறுத்தம் குறித்து குறுஞ் செய்திகள் அனுப்பவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின்துறை அதிகாரிகளிடம் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X