சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

குடும்பத்தை எப்படியும் காப்பாற்றணும்!

Updated : ஜூலை 19, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 குடும்பத்தை எப்படியும் காப்பாற்றணும்!

மனவளர்ச்சி குறைபாடுடைய தந்தை, விபத்தில் அடிபட்டு, வேலைக்குச் செல்ல முடியாத தாய், தன்னைப் போன்றே வளர்ச்சி குறைபாடுடைய சகோதரன் என, தன் குடும்பப் பின்னணி பற்றி, நகைச்சுவை நடிகர் பரந்தாமன்: கிருஷ்ணகிரி மாவட்டம், சிவலிங்கபுரம் என்ற மலை கிராமம் தான் சொந்த ஊர். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது.

தருமபுரி அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படிச்சேன். சினிமா கனவுகளுடன், சென்னையில் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் கல்லுாரியில் சேர்ந்தேன். அங்கு சில நண்பர்கள், என் நடிப்பைப் பார்த்து, சில வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். 'யு -டியூப்' சமூக வலைதள சேனல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நடிகர்கள் நாசர், தம்பி ராமையா போன்றோர், என் நடிப்பை பாராட்டியுள்ளனர். குழந்தையில் இருந்தே, நான் பார்த்து வளர்ந்தது, வறுமை மட்டும் தான். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், என் தந்தைக்கு, மனநல பாதிப்பு ஏற்பட்டது. சில நாள் நல்லா இருப்பார்; திடீர்னு, சில நாள் மனநிலை சரியில்லாமல் சுத்துவார். அம்மாவும், நானும் சேலம், பெங்களூர் ஆஸ்பத்திரிகளுக்கு, கூட்டிட்டு போவோம்.

சிகிச்சைக்காக அடிக்கடி மின்சாரம் பாய்ச்சியே, அவர் உடம்பில் இருந்த ரத்தம் எல்லாம் சுண்டிப்போச்சு. இனிமேல் அவர் உடம்பில், சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு ரத்தமுமில்லை; எங்களிடம் பணமும் இல்லை. வேறு வழியில்லாமல், வீட்டில் சங்கிலியால் கட்டி வைக்க வேண்டியதாக போச்சு. பெத்த அப்பாவ சங்கிலியால கட்டி வைச்சுப் பாக்குற கொடுமை, எந்த மகனுக்கும் வரவே கூடாதுங்க.

எங்க அம்மா தான், கூலி வேலைக்குப் போய் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. எட்டு மாதங்களுக்கு முன், விபத்தில் அம்மா கால் எலும்பு முறிஞ்சு போச்சு. அதிலிருந்து அவர்களும், வீட்டிலேயே முடங்கிட்டாங்க. தம்பி சகாதேவனும் என்னைப் போலவே வளர்ச்சி குறைபாடுடையவன்; சென்னையில், தமிழ் இலக்கியம் படிக்கிறான். ஊரடங்கு இல்லாம இருந்திருந்தால், ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து, என்னால் முடிஞ்சதை வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்.

கொரோனா, அதுக்கும் வழியில்லாம முடக்கிப் போட்டுருச்சு. இப்போது எங்க வீட்டின் ஒட்டுமொத்த வருமானமே, மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவிப்பணம், 1,000 ரூபாய் தான். என் லட்சியம், குடும்ப வறுமையைப் போக்கி அப்பா, அம்மா, தம்பியை, பத்திரமாக பார்த்துக்க வேண்டும் என்பது தான்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krismoo - Vellore,இந்தியா
20-ஜூலை-202010:40:28 IST Report Abuse
Krismoo ஏன் இவருடைய மொபைல் நம்பரை இந்த கட்டுரையில் பிரசுரிக்க கூடாது ? நல்ல மனம் படைத்த யாராவது சிறிய உதவி செய்வார்களே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X