கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை

Added : ஜூலை 19, 2020
Share
திருப்பூர்:கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகள் கடன் அட்டை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது:மத்திய அரசின், விவசாயிகள் கடன் அட்டை திட்டம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு, கால்நடை வளர்ப்போருக்கும் வழங்கப்படுகிறது. இதில் சேர்வோருக்கு, 2 லட்சம் ரூபாய் வரையும், ஏற்கனவே விவசாயக்கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, கால்நடை

திருப்பூர்:கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகள் கடன் அட்டை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது:மத்திய அரசின், விவசாயிகள் கடன் அட்டை திட்டம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு, கால்நடை வளர்ப்போருக்கும் வழங்கப்படுகிறது. இதில் சேர்வோருக்கு, 2 லட்சம் ரூபாய் வரையும், ஏற்கனவே விவசாயக்கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்பு செலவுகளுக்காக, 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கடன் தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துவோருக்கு, வட்டியில் தள்ளுபடி, ஊக்கத்தொகை வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப்படிவத்தை, இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை அருகில் உள்ள, கால்நடை மருந்தக கால்நடை மருத்துவரிடம் கையொப்பம் பெற்று, விவசாயிகள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில், கால்நடை வளர்ப்போர் சேர்ந்து, பயன்பெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X