அமைதிக் கூட்டத்தில் சுமூகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைதிக் கூட்டத்தில் சுமூகம்

Added : ஜூலை 19, 2020
Share

மயிலம்; மயிலம் அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி வரும் 22ம் தேதி மா.கம்யூ., சார்பில் ஊராட்சி அலுவலகம் எதிரே ஒப்பாரி போராட்டம் அறிவித்திருந்தனர்.இது குறித்து சமாதானக் கூட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. பி.டி.ஒ., சிவக்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலம்புச் செல்வம், குணமணி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பாதிராபுலியூரில் அனைத்து தெருக்களுக்கும் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வேண்டும். தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். கால்வாய் அமைத்து சிமென்ட் சாலை போட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.ஒன்றிய செயலர் கலைச்செல்வன், கிளைச் செயலர் கெஜமூர்த்தி, நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X