தொற்று பரவல் பகுதியில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பரவல் பகுதியில் ஆய்வு

Added : ஜூலை 19, 2020
Share
மயிலம்; மயிலம் ஒன்றியம் வீடூர் கிராமத்தில் விழுப்புரம் திட்ட இயக்குநர் மகேந்திரன் கொரோனா பாதித்த பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மயிலம் அடுத்த வீடூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனால் கிராமத்தில் உள்ள தெருக்கள் சீல் வைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிருமி நாசினி தெளித்து

மயிலம்; மயிலம் ஒன்றியம் வீடூர் கிராமத்தில் விழுப்புரம் திட்ட இயக்குநர் மகேந்திரன் கொரோனா பாதித்த பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மயிலம் அடுத்த வீடூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனால் கிராமத்தில் உள்ள தெருக்கள் சீல் வைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.இந்நிலையில் கிராமத்தில் தடுப்பு நடவடிக்கை பணிகளை விழுப்புரம் திட்ட இயக்குனர் மகேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்களிடம் முகக்கவசம் அணிவது, சுற்றுப்புற சுகாதாரத்தின் அவசியம் குறித்து விளக்கினார்.மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், சிவகுமார், உதவி பி.டி.ஓ.,க்கள் குணமணி, சிலம்புச்செல்வன் ஊராட்சி செயலர் மனோகரன், சுகாதார ஆய்வாளர் பாலகுமரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X