பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு நகர வங்கியில்நிர்வாக குழுக் கூட்டம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது.தலைவர் தங்க சேகர் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் தனுசு, சம்பத், பாஸ்கரன், சக்திவேல், செந்தில், கலைச்செல்வன், தாயம்மாள், தயாளுபதி, நித்யா, ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். மேலாளர் ஜெயராமன், பொது மேலாளர் குமார் பங்கேற்றனர்.கூட்டத்தில், இயக்குனர்கள் தனுசு, கலைசெல்வன் ஆகியோர், கொரோனா ஊரடங்கால் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளதையொட்டி, பிணையில்லாமல் கூட்டுறவு வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த கடன் தொகை விண்ணப்பங்கள் கூட, விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் வழங்கப்படாதது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதன் மீது, அதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளதாகவும், விரைவில் சிறு வியாபாரிகளுக்கு கடன்கள் வழங்கப்படும் என தலைவர் தங்க சேகர் தெரிவித்தார்.இதையடுத்து கூட்டத்தில், 1.5 கோடி ரூபாய் கூட்டுறவு நகர வங்கியில் வீட்டு அடமான கடனாகவும், 50 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் வழங்கப்பட உள்ளது. இடைக்கால ஒப்பந்த அடிப்படையிலான அப்ரைசர்கள் பணிக்காலத்தை நீட்டிப்பது. சிறு வணிக கடன் சட்டத்திற்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் வணிகர்களுக்கு வழங்குதல், முதல்வர் உத்தரவின் பேரில் மீண்டும் நகை அடகு கடன் வங்கியில் வழங்குவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X