பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசை; தர்ப்பணம் கொடுக்க சிக்கல்: பூ வியாபாரிகள் வாட்டம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஆடி அமாவாசை தர்ப்பணம் மற்றும் சிறப்பு வழிபாடு இல்லாததால், எளிமையாக அவற்றை கடைபிடிக்க, பக்தர்கள் தயாராகியுள்ளனர்.இன்று (20ம் தேதி) ஆடி அமாவாசை. இதையொட்டி, நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்றவற்றை, பொதுமக்கள் கொடுப்பது வழக்கம்.இன்றைய தினம், கோவில்களில், பொதுமக்களும் வழிபாட்டுக்காக குவிவர். கொரோனா பரவலால், இவ்வாறு, பக்தர்கள், மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், பேரூர், அவிநாசி, திருமூர்த்தி மலை, கொடுமுடி, பவானி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, திதி, தர்ப்பணம் கொடுக்கச் செல்வது வழக்கம்.ஊரடங்கு விதிமுறையால், வீட்டிலேயே, விரதம் அனுஷ்டித்தல், காகத்திற்கு உணவிடல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி, ஆடி அமாவாசையை கடைபிடிக்க உள்ளனர்.'வாடிய' வியாபாரிகள்வழக்கமாக, ஆடி அமாவாசைக்கு முதல் நாள், 5 முதல், 6 டன் பூ, மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். வழிபாட்டுக்காக, ஏராளமானோர் பூக்களை வாங்குவர்; அதிகாலை முதல், இரவு வரை விற்பனை களைகட்டும். இன்று, ஆடி அமாவாசை நாளாக இருந்த போதும், நேற்று முழு ஊரடங்கு என்பதால், திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது; அங்குள்ள, 45 கடைகள் மூடப்பட்டிருந்தன.
வியாபாரிகள் கூறுகையில், 'ஜூலை, 31 வரை ஊரடங்கு என்பதால் மூன்று ஆடி வெள்ளிக்கிழமை கழிந்துவிடும். கோவில் திறப்புக்கு வாய்ப்பு இல்லாததால் விற்பனை இருக்காது; இதனால், வியாபாரம் பாதித்துள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X