பொது செய்தி

தமிழ்நாடு

வாகன போக்குவரத்து இன்றி வெறிச்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு காரணமாக டோல் பிளாசாக் களில் அதிக வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாடு முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கை அமல் செய்துவருகிறது. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்குகாரணமாக நெடுஞ்சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தினமும் சுமார் 15,000 வாகனங்கள் பயணிக்கும் சாலையில் நேற்று காலை முதல் மாலை வரை 4ஆயிரத்திற்கும் குறைவான வாகனங்களேசாலையில் சென்றது. அதிக அளவில் போக்குவரத்து இல்லாததால் பரபரப்பாக காணப்படும் டோல் பிளாசா வெறிச்சோடி காணப்பட்டது.டோல் பிளாசாவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் சென்னையிலிருந்து வருகின்ற வாகனங்கள் இ-பாஸ் அனுமதியுடன் வருகின்றனவா என ஆய்வு செய்துஅனுப்பினர்.விக்கிரவாண்டியில் இன்றுவரை 3 நாட்களுக்கு கடைகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இன்றி முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது.ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் பைக்குகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் மடக்கிப்பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். கண்காணிப்பு குழுவை சேர்ந்த பி.டி.ஓ.,க்கள் நந்த கோபால கிருஷ்ணன் எழிலரசு ஆகியோர் ஒன்றியம் முழுவதும் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலையில் தேவையின்றி சுற்றித் திரிபவர்களை கண்காணித்து போலீசார் உதவியுடன் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X