பொது செய்தி

தமிழ்நாடு

சரஸ்வதி பள்ளி மாணவர்கள் சாதனை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விழுப்புரம்; பிளஸ் 2 பொதுத்தேர்வில், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகள் கவிநிலா 554 மதிப்பெண்ணும், ஸ்ரீரஞ்சனி 551, காயத்ரி 530, அபிநயா 512, ராகபிரவினா 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவிகளை, பள்ளி தாளாளர் ராஜசேகரன், முதல்வர் நாகராஜன், பொருளாளர் சிதம்பரநாதன் ஆகியோர் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 500 மதிப்பெண்களுக்குமேல் 5 மாணவிகளும்,400 மதிப்பெண்களுக்கு மேல்66 மாணவ, மாணவிகளும் பெற்று சாதித்துள்ளனர்.அதே போல், கனிணி அறிவியல் பாடத்தில் இரு மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X