பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்த பகுதிகளில்அமைச்சர் சண்முகம் நேரில் ஆய்வு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரத்தில் கொரோனா பாதித்த பகுதிகளில் அமைச்சர் சண்முகம் ஆய்வு செய்து, நிவாரண பொருட்கள் வழங்கினார்.விழுப்புரம் நகராட்சி ஜி.ஆர்.பி., தெருவில், அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றது.இந்த பகுதியில் அமைச்சர் சண்முகம் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின், அங்குள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை அமைச்சர் சண்முகம் வழங்கினார்.அப்போது, கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மற்றும் அ.தி.மு.க., நகர செயலாளர் பாஸ்கர், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பசுபதி, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை தலைவர் ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணை தலைவர் குமரன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X