கண்டாச்சிபுரத்தில் பரவும்தொற்றால் மக்கள் அச்சம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரத்தில் மேலும் 3 நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.கண்டாச்சிபுரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தோற்று உறுதியானது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கண்டாச்சிபுரத்தில் 15 நாட்களுக்கு அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற கடைகளை அடைக்க உத்தரவிட்டிருந்தார்.கொரோனா தொற்று பாதித்த பலர் படிப்படியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனையடுத்து அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 பேருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சையில் உள்ளனர். தற்போது மேலும் 3 பேருக்கு உறுதியாகியுள்ளதால், மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்னர். ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X