சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு14 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

செஞ்சி; முன்விரோத தகராறில் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.செஞ்சி அருகே உள்ள சேர்விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி அம்மணி 50; சில மாதங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த நடராஜன் மகன் சுந்தரமூர்த்தி 29: ஓட்டி சென்ற பைக் மோதி அம்மணியின் கணவர் ராமதாஸ் இறந்து விட்டார்.இது குறித்து வழக்கு நடந்து வருகிறது. இதனால் இருகுடும்பத்திற்கும் முன் விரோதம் உள்ளது. இருதரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் அம்மணி, அவரது மகள் அம்பிகா 35 ஆகியோர் காயமடைந்தனர்.இது குறித்தபுகாரின் பேரில் செஞ்சி போலீசார் சுந்தரமூர்த்தி, அவரது குடும்பத்தினர் ஞானவேல், சரவணன், ராஜகுமாரி உள்ளிட்ட 8 பேர் மீதும், சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அம்மணி, அவரது மகள்கள் அம்பிகா, கல்பனா உட்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X