சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அவர் திராவிடஇயக்கத்தின்தலைவர்!

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அவர் திராவிடஇயக்கத்தின்தலைவர்!


எஸ்.ஜனமேஜயன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட அரசியல் வரலாற்றில், கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், காளிமுத்து என, பலர் இருக்கும் போது, நெடுஞ்செழியனுக்கு மட்டும் ஏன் சிலை அமைக்க வேண்டும் என, வரலாறு அறியாத சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திராவிட இயக்கத்தில், 1,000க்கும் மேற்பட்ட தலைவர்கள் இருக்கலாம். ஆனால், தன் வாரிசு என, முன்னாள் முதல்வர், அண்ணாதுரையால் அடையாளம் காட்டப்பட்டவர், நெடுஞ்செழியன் மட்டுமே. சென்னை, ராபின்சன் பூங்காவில், தி.மு.க.,வை உருவாக்கிய, ஐம்பெரும் தலைவர்களில், நெடுஞ்செழியனும் ஒருவர். தி.மு.க., துவக்கப்பட்டபோது, அழைப்பிதழில், கருணாநிதியின் பெயர், 28 பேரில் கடைசியாக இடம் பெற்று இருந்தது. எனவே அவர், அதில் கலந்து கொள்ளவில்லை.'தம்பியே வா... தலைமையேற்க வா' என, அண்ணாதுரையால் அடையாளம் காட்டப்பட்டவர், நெடுஞ்செழியன்.

அண்ணாதுரை மறைவுக்குப் பின், நெடுஞ்செழியன், முதல்வராக பதவியேற்க வேண்டிய சூழலில், கருணாநிதி, அடிமைப்பெண் படப்பிடிப்பில் இருந்த, எம்.ஜி.ஆரை சந்தித்து, தன்னை ஆதரிக்கும்படி மன்றாடினார்.கருணாநிதியுடன் இருந்த நட்பின் காரணமாக, அண்ணாதுரையின் ஆணைக்கு விரோதமாக செயல்பட, எம்.ஜி.ஆர்., முடிவெடுத்தார்.அதனால், முதல்வர் பதவி, கருணாநிதிக்கு கிடைத்தது. கட்சியின் கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்தன. தான் தவறான முடிவு எடுத்து விட்டதை அறிந்த, எம்.ஜி.ஆர்., போர்க்குரல் எழுப்பினார். எனவே, தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டார்; அ.தி.மு.க., உதயமானது.

மக்களின் அமோக ஆதரவால், எம்.ஜி.ஆர், முதல்வரானார். காலமாகும் வரை, அவர் தான் முதல்வர்; கருணாநிதியால், புலம்ப மட்டுமே முடிந்தது. மக்களின் ஆதரவு, இவருக்கு கிடைக்கவே இல்லை. எம்.ஜி.ஆர்., தான் அமர்ந்துள்ள முதல்வர் நாற்காலி, நெடுஞ்செழியனுக்கு சொந்தமானது என்ற நன்றி உணர்ச்சியில், அவரை கட்சியில் சேர்த்து, தனக்கு அடுத்த இடத்தை கொடுத்து அழகு பார்த்தார்.அதன் பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதா பதவியேற்றார். இவரும், நெடுஞ்செழியனுக்கு முக்கியமான பதவிகள் கொடுத்து, அழகு பார்த்தார்.நெடுஞ்செழியன் மறைந்ததும், அண்ணாதுரை சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய இடம் கேட்டார், ஜெயலலிதா; அப்போதைய, தி.மு.க., அரசு மறுத்தது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றக்கூட, தி.மு.க., மறுத்து விட்டது.

'அண்ணாதுரை வகித்த, தி.மு.க., பொதுச்செயலர் பதவி உங்களுக்குத் தான்' என, நெடுஞ்செழியனை சமாதானப்படுத்தி, காலப்போக்கில், அந்த பதவியை, 'டம்மி' ஆக்கி, தலைவர் பதவியில் அமர்ந்தார், கருணாநிதி.ஆனால், அ.தி.மு.க.,வில் இன்று வரை தலைவர் பதவி கிடையாது. எனவே தான், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வரிசையில், நெடுஞ்செழியனுக்கும் சிலை அமைக்கின்றனர்.இது, அவருக்குப் போடும் பிச்சை அல்ல; தி.மு.க.,வை உருவாக்கிய அண்ணாதுரையின் ஆணையை பின்பற்ற வேண்டிய கடமை.

முதலில்நீங்கள் திருந்துங்கள்!
கி.லட்சுமி நரசிம்மன், கே.என்.பேட்டை, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'சமூக இடைவெளி, முகக் கவசம் இன்றி, மக்கள் நடமாடுகின்றனர். புதுச்சேரியில், 'கொரோனா' தொற்று அதிகம் பரவ, மக்கள் தான் காரணம்' என, அம்மாநில முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.சரி தான்... ஊருக்கு உபதேசம் செய்யும், முதல்வர் நாராயணசாமி, சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், சமூக இடைவெளி சிறிதும் இல்லை; யாருமே, முக கவசம் அணியவில்லை. இது மட்டும் சரியா?
முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட அதிகார வர்க்கத்திற்கு, கொரோனா தொற்று ஏற்படாதா? நோய்க்கு, ஏழை - பணக்காரன்; சாமானியன் - அதிகாரி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது; அலட்சியமாக இருக்கும் அனைவருக்கும், நோய் தொற்று ஏற்படும்.மேலும், மக்களுக்கு அறிவுரை வழங்கும் ஆட்சியாளர்களே, விதியை கடைப்பிடிக்கவில்லை என்றால், அது கேலிக்குரியது. எனவே, அரசு கூட்டங்களில், முதலில் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக கடைப்பிடிக்கட்டும்; அப்புறம், மக்களை குறை சொல்லலாம்.

ஏதோ இடிக்கிறதே!
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் பணியாற்றிய சரித், ஸ்வப்னா மற்றும் கேரள முதல்வரின் முதன்மைச் செயலராக பணியாற்றிய சிவசங்கர் ஆகியோர், 30 கிலோ தங்கம் கடத்திய விவகாரத்தில், வசமாக சிக்கியுள்ளனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த தங்கம் கடத்தல் விவகாரத்தில், ஆளுங்கட்சியின் பெயர் பலமாக அடிபடுகிறது.

தங்கக் கடத்தல் விவகாரத்தில், தான் கைது செய்யப்படாமல் இருக்க, ஸ்வப்னா, தன் குடும்பத்துடன், பெங்களூருக்கு தப்பிச் சென்றார். 'கொரோனா' ஊரடங்கால், மாவட்டம் தாண்டியே செல்ல முடியாத நிலையில், இன்னொரு மாநிலத்திற்கு அவர் எப்படி சென்றார்?ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலத்தால், கேரள ஆட்சியாளர்களின் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில் ஏறப்போகின்றன.கடத்தல் தங்கத்தின் மூலம் கிடைக்கும் பணம், பயங்கரவாதிகளின் செலவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலும், பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா ஒழிப்பில், முதல்வர் பினராயி விஜயன் சம்பாதித்த பேரும், புகழும், தங்கக் கடத்தலில் தரைமட்டம் ஆகிவிட்டன.

இந்த விஷயத்தில், காங்., தலைவர்கள் சோனியாவும், அவரது மகன் ராகுலும், எந்த விமர்சனமும் செய்யாமல், அடக்கி வாசிப்பது, பலத்த சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.தமிழக அரசியல் தலைவர்களான ஸ்டாலின், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோரும், வாயை இறுக மூடி இருப்பதும், 'ஏதோ இடிக்கிறதே...' என, மக்களை சிந்திக்க செய்துள்ளது. ஏனெனில், இப்படியொரு தங்கக் கடத்தல் விவகாரம், தமிழகத்தில் நடந்திருந்தால், மேற்கண்டோர் வானத்துக்கும், பூமிக்குமாய் குதித்து, கண்டன முழக்கம் செய்திருப்பர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜூலை-202006:18:19 IST Report Abuse
D.Ambujavalli நல்ல படிப்பாளி, நிர்வாகத்திறன் உள்ளவர், ஆனால் நெடுஞ்செழியன் ‘எங்கும் இரண்டு, எப்போதும் இரண்டு’ என சென்ற இடமெல்லாம் இரண்டாம் நிலையில் இருந்தே மறைந்துவிட்டார். கெட்டிக்காரர் குடும்பம் கொள்ளு, எள்ளு பேரன் பேத்தி வரை பதவிகளில் அமர்ந்துள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X