பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகள் கையில் எதிர்காலம்:ஏற்றுமதியாளர் சங்கம் திட்டவட்டம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருப்பூர்:'வங்கிகள் தயக்கமின்றி கடன் வழங்கினால், ஆடை உற்பத்தி துறை, விரைவில், கொரோனா பாதிப்புகளிலிருந்துமீண்டு விடும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.கொரோனாவால், திருப்பூர் பின்னலாடை துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களை சரிவிலிருந்து மீட்க, மத்திய அரசு அவசர கால கடன் திட்டத்தை அறிவித்தது. சில வங்கிகள், கடன் வழங்க தயங்குகின்றன.வங்கியாளர்களுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் விடுத்துள்ள கோரிக்கை;கொரோனாவால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை, மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஆடை உற்பத்தியில், சீசன் முக்கியம். சீசன் தவறியதால், உற்பத்தி செய்த ஆடைகள் தேங்கின.வெளிநாட்டு வர்த்தகர்களுடன் பேசி, அவற்றை ஏற்றுமதியாளர்கள் அனுப்பி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின், சிறப்பான வளர்ச்சியை எட்டமுடியும் என்ற நம்பிக்கையுடன், வர்த்தக பயணம் துவங்கியுள்ளது.மனித இனம் உள்ளவரை, ஆடை தேடல் இருந்து கொண்டே இருக்கும். ஆடை உற்பத்தி துறைக்கு சரிவே கிடையாது. இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.சீனா மீதான பிற நாடுகளில் எதிர்மறை பார்வை, இந்திய தொழில் துறைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வர்த்தகர்கள், ஆடை தயாரிப்புக்கானஆர்டர்கள் வழங்குவதற்காக, வர்த்தக விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.புதிய ஆர்டர்களை கையாள, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதிகளவு நிதி தேவைப்படுகிறது. தற்போதைய சூழலில், தொழில் துறைக்கு, வங்கிகளின் முழு ஆதரவு தேவை.ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, தயக்கமின்றி கடன் வழங்கினால், வெகு விரைவிலேயே, ஆடை உற்பத்தி துறை மீண்டெழுந்துவிடும்; வரும் ஆண்டுகளில், வர்த்தகம் பெருகும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X