பொது செய்தி

இந்தியா

இவர் இப்படி! 'தாதா' விகாஸ் துபே

Updated : ஜூலை 19, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 இவர் இப்படி! 'தாதா' விகாஸ் துபே

உத்தர பிரதேச போலீசாரால், சமீபத்தில், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட, விகாஸ் துபே மீது, கொலை, கொலை முயற்சி உட்பட, 62 கிரிமினல் வழக்குகள் உள்ளன. தொழிலதிபர்கள், கல்விப் பயிற்சி மைய உரிமையாளர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்த வழக்குகளும் உள்ளன.

உ.பி.,யில், கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில், விவசாயி ஒருவருக்கு மூத்த மகனாக பிறந்த, விகாஸ் துபேவுக்கு, கல்லுாரியில் தான் அரசியல் வட்டாரத்தின் நட்பு கிட்டியது. அரசியல் அறிவியல் பட்டதாரியான, விகாஸ் துபேவை, அரசியல் கட்சியினர், தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டனர்.

ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா, பா.ஜ., என பல கட்சிகள் தாவி, இறுதியாக, பகுஜன் சமாஜ் கட்சியில் அடைக்கலமானார், விகாஸ் துபே. உ.பி.,யில் ஐந்து முறை சட்டசபை உறுப்பினராக தேர்வாகி, அமைச்சர், சபாநாயகர் பதவிகளை வகித்த, மறைந்த, ஹரி கிரிஷ்ண ஸ்ரீவத்சவா தான் தன் அரசியல் குரு என, விகாஸ் துபே எப்போதும் கூறுவார்.

ஸ்ரீவத்சவா, பிராமணர்கள் ஓட்டுகளை கவரவும், அவர்களிடையே உள்ள எதிர்ப்பாளர்களை ஓரம் கட்டவும், விகாஸ் துபேயை பயன்படுத்திக் கொண்டார். அதனால், விகாஸ் துபேயால் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பது தான் உண்மை.கடந்த, 2000ல், ஒரு கொலை வழக்கில், சிறையில் இருந்தபடியே, பிமா பஞ்சாயத்து தேர்தலில், விகாஸ் துபே வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, குடும்பத்தினரும் அரசியலுக்கு வந்தனர்.

பிக்ரு கிராமத்தில் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து, இவர் உள்ளுர், 'டிவி'க்கு அளித்த பேட்டி, வேகமாக பரவி, அவரை மேலும் பிரபலமாக்கியது.பல்வேறு கிரிமினல் குற்றங்களை, சர்வசாதாரணமாக செய்து, பிக்ரு கிராமத்து, 'தாதா'வாக வலம் வந்தார். கிரிமினல் குற்றங்களுக்காக தன்னை பிடிக்க வரும் போலீசாரை, அரசியல்வாதிகளின் உதவியால் விரட்டி அடித்தார்.

இவர் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து, சன்னி தியோல் நடிப்பில், அர்ஜூன் பண்டிட் என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. அதில், காதலியின் துரோகத்தால், தாதாவாக மாறியதாக காண்பித்து இருப்பர்.

கடந்த, 1980ல், தன் கிராமத்தில், ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருந்த, விகாஸ் துபேவுக்கு தற்போது, 25 ஏக்கருக்கும் அதிகமான நிலம் உள்ளது. ஆனால், அவருக்கு தேவைப்பட்டதோ, வெறும், 6 அடி நிலம்தான்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஜூலை-202008:17:21 IST Report Abuse
Sampath Kumar ஒரு தீவிரவாதியை என்னோமோ தியாகி ரேஞ்சுக்கு புகழ்வது வக்ர தின் வேலி பாடல்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202004:30:04 IST Report Abuse
J.V. Iyer தீயவர்கள் யாராக இருந்தாலும் அழிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
Arul. K - Hougang,சிங்கப்பூர்
20-ஜூலை-202008:46:35 IST Report Abuse
Arul. K அடைக்கலமானார், வெற்றி பெற்றார்.வலம் வந்தார், கூறுவார் - இவனுக்கு எதுக்கு ஆர் விகுதியுடன் மரியாதை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X