பொது செய்தி

தமிழ்நாடு

கறிக்கோழி உற்பத்தியில் நவீனம்: அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 கறிக்கோழி உற்பத்தியில் நவீனம்: அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு

பல்லடம்:'கறிக்கோழி உற்பத்தியை நவீன முறையில் மேற்கொள்ள, உதவி செய்ய வேண்டும்' என, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி (பி.சி.சி,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:ஊரடங்கால், கறிக்கோழி தொழில் சார்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள், சொந்த ஊர் சென்றது, நுகர்வு குறைவு போன்ற காரணங்களால், கொள்முதல் விலை, படிப்படியாக குறைந்து வருகிறது. உற்பத்தியாளர்கள், போதிய வருவாயின்றி நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். தொழில், இயல்பு நிலைக்கு திரும்ப, கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை, வருமான வரியில் தளர்வு, வங்கி கடன் வட்டி செலுத்த சலுகை வழங்க வேண்டும்.புதிதாக தொழில் துவங்க, 2, 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும். கறிக்கோழி உற்பத்தியில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம் என்ற நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய இயந்திரங்களுக்கு, ஜி.எஸ்.டி., வரியில் விலக்களிக்க வேண்டும்.மாநில அரசு உதவும் பட்சத்தில், கறிக்கோழி உற்பத்தி தொழில், சரிவில் இருந்து மீளும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X