இந்தியா

நிதிக்கு ஏற்ப திட்டங்களை அறிவியுங்கள்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நிதி திரட்ட முடியும் அளவிற்கு திட்டங்களை அறிவித்து முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கு கடந்த ஆண்டைவிட கூடுதலான தொகைக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு ரூ.1700 கோடி நிதியைத்தான் புதுச்சேரி அரசுக்கு வழங்கியுள்ளது.மேலும், கொரோனா தாக்கம் நீடித்து வருவதால் அரசின் வரி வருவாயும் மூன்றில் ஒருபங்கு குறைய வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் எவ்வளவு நிதி திரட்ட முடியுமோ அந்தளவிற்கான திட்டங்களை மட்டுமே அறிவித்து, அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பில்லாத தனியார் பஸ் தொழிலாளர்கள், டாக்சி டிரைவர், சமையல் கலைஞர்கள், ஆட்டோ டிரைவர், ஓட்டல் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு தொழிாளர்களை கண்டறிந்து தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.சுகாதாரத்துறையில் என்.ஆர்.எச்.எம். திட்டத்தின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை பணிநிரந்தரம் செய்து, கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.சிறப்புக்கூறு நிதி முழுவதையும் ஆதிதிராவிடர்கள் வாழ்க்கைத்தரம் மேம்படுத்த செலவு செய்திட வேண்டும்.கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட்டு, வெளிச்சந்தையின் கடன் வாங்கி, ஆலையை மேம்படுத்தி இயக்க வேண்டும். ஆலை கழிவில் இருந்து எத்தனால் மற்றும் மின்சாரம் தயாரிக்க வேண்டும்.ஊரடங்கு அமலில் இருக்கும் வரை மாதம் ரூ.2,000 நிவாரணம் வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். 30 கிலோ அரிசி வழங்குவதை உறுதிப்படுத்துவதுடன், ரேஷன் கடைகளை இயக்க செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X