சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலையில் மர்மம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், பெண் துாக்குமாட்டி தற்கொலை செய்த நிலையில், வீட்டில் இருந்த உறவினரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், பி.என்., ரோடு இளங்கோ நகரை சேர்ந்தவர் தனபால், 40. இவரது மனைவி தனலட்சுமி, 38. தம்பதிக்கு, திருமணமாகி, 8 ஆண்டுகளாகிறது; குழந்தை இல்லை. இவர்களுடன், தனபாலின் உறவினர் விஜய், 25 வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவால், தனபால், திருச்சிக்கு சென்றார்.இந்நிலையில், நேற்று காலை, தனலட்சுமி, வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.அருகே, விஜய், துாக்குமாட்டிய நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற, வடக்கு போலீசார், தனலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X