இந்தியா

தமிழ் வழி பயிலும் மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; தமிழ் வழி கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என சிந்தனையாளர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து பேரவை தலைவர் செல்வம், முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சரிடம் கொடுத்துள்ள மனு:தமிழக அரசு, அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் கல்வியில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்கிட அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது நிச்சயமாக தனியார் பள்ளிகளில் பயின்றால் தான் உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான மனப்பான்மையை பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் மாற்றும்.எனவே புதுச்சேரி அரசு உடனே இது போன்ற முடிவை அமைச்சரவையில் கலந்து பேசி அறிவிக்க வேண்டும். மேலும் இந்த உள்ஒதுக்கீடு 20 சதவீதமாக இருக்க வேண்டும். இது அனைத்து வித உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் அமைய வேண்டும்.அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்ததும், பாட புத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கிட உதவும் வகையில், அவர்களின் வங்கி கணக்கில் ரூ.10,000 அரசு செலுத்த வேண்டும். தமிழ் வழி கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X