மவுனம் காத்த போலீசார்: களமிறங்கிய தாசில்தார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மவுனம் காத்த போலீசார்: களமிறங்கிய தாசில்தார்

Added : ஜூலை 19, 2020
Share
அனுப்பர்பாளையம்:ஊரடங்கில் நடந்த மதுபான விற்பனையை தடுக்க, வருவாய்த்துறையினரே களமிறங்கினர்.நேற்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் சிறுபூலுவபட்டி ரோட்டில் உள்ள பார்களில், மதுபான விற்பனை களைகட்டியது.அப்பகுதி மக்கள், வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.சில

அனுப்பர்பாளையம்:ஊரடங்கில் நடந்த மதுபான விற்பனையை தடுக்க, வருவாய்த்துறையினரே களமிறங்கினர்.நேற்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் சிறுபூலுவபட்டி ரோட்டில் உள்ள பார்களில், மதுபான விற்பனை களைகட்டியது.அப்பகுதி மக்கள், வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.சில நிமிடங்களில், திருப்பூர் சமுக பாதுகாப்பு திட்ட வடக்கு தாசில்தார் ராஜ்குமார், மாநகராட்சி முதல் மண்டல சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர், தண்ணீர் பந்தல் காலனியில் உள்ள ஒரு பாரில் ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு, விற்பனைக்கு, 23 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து, வேலம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.தாசில்தார் களமிறங்கிய நிலையில், போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறுபூலுவபட்டியில் உள்ள பாரில், மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்தவரை கைது செய்து, 34 மதுபாட்டில் பறிமுதல் சேர்த்தனர். அக்கடையில் உள்ள பாருக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.அனுப்பர்பாளையம் போலீசார் பூலுவப்பட்டி, போயம்பாளையம், அய்யப்பா நகர் பகுதியில் உள்ள மதுபான பார்களில், மதுவிற்பனையில் ஈடுபட்ட வன்னியராஜன், 32, தினகரன், 29, நடராஜன், 33, ஆகியோரை கைது செய்து, 20 மதுபான பாட்டில் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X