இந்தியா

வி.ஏ.ஓ.,வை தாக்கிய கராத்தே மாஸ்டர் கைது

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; வி.ஏ.ஓ.,வை தாக்கிய கராத்தே மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.முதலியர்பேட்டை வைத்திலிங்க செட்டி தெரு கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே வராத வகையில் தடுப்பு கட்டைகள் போடப்பட்டுள்ளது.இப்பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் 12.00 மணியளவில் வி.ஏ.ஓ.,சண்முகம், உதவி மகப்பேறு செவிலியர் ஆஷா உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அப்பகுதியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ராமராஜ்,30; கட்டுபாட்டு மண்டல பகுதியில் இருந்து வெளியில் பைக்கில் வந்தார்.அவரை வி.ஏ.ஓ., சண்முகம் தடுத்தார். ஆத்திரமடைந்த ராமராஜ், வி.ஏ.ஓ.,வை திட்டி, தாக்கினார்.இது குறித்து வி.ஏ.ஓ.,சண்முகம் கொடுத்த புகாரில் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ராமராஜை கைது செய்து, கொரோனா பரிசோதனைக்காக, கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X