இந்தியா

வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.முதலியார்பேட்டை, உழந்தைகீரப்பாளையம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள்,50; ஓட்டலில் வேலை செய்து வருகிறார். கடந்த 26 ம்தேதி மனைவி, பிள்ளைகள் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், பெருமாள் வீட்டை பூட்டிக் கொண்டு, ஜிப்மருக்கு சென்று மாத்திரை வாங்கிக் கொண்டு பகல் 12 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 சவரன் நகை திருடு போயிருந்தது.புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X