இந்தியா

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர்; கிருமி நாசினி தெளிப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சட்டசபை இன்று கூடுவதையொட்டி மைய மண்டபம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9:30 மணிக்கு கவர்னர் உரையுடன் துவங்குகிறது. தொடர்ந்து கவர்னரின் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து படிக்கிறார்.பகல் 12:05 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கொரோனாவை தடுத்திடும் வகையில் சட்டசபையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கவர்னர், முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயலர், அரசு செயலர்கள், துறை தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டும் சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவர்.சட்டசபை இன்று கூடுவதையொட்டி நேற்று சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அத்துடன் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைகள் அமைந்துள்ள மையமண்டபம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. முன்னதாக மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X