இந்தியா

2,000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு பலி எண்ணக்கை 28 ஆக உயர்வு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதிதாக 109 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் மொத்த பாதிப்பு 1,999 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நேற்றைய தினம் 768 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 109 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், 77 பேர் கதிர்காமம் கோவிட் மருத்துவமனையிலும், 27 பேர் ஜிப்மரிலும், 3 பேர் காரைக்காலிலும், 2 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் இதுவரை 1,999 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 28 பேர் இறந்துள்ளனர். 1,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் 422 பேர், ஜிப்மரில் 213 பேர், கோவிட்கேர் சென்டரில் 92 பேர், காரைக்காலில் 50 பேர், ஏனாமில் 40 பேர் என மொத்தம் 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் இதுவரை 30,652 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 28,214 பரிசோதனைகள் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 361 பேர் பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள் ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X