புதுடில்லி: கொரோனாவிலிருந்து மீண்டு பிளாஸ்மா தானம் செய்து வரும் டில்லி போலீசாரை, 'பிளாஸ்மா வாரியர்ஸ்' என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் ரத்த பிளாஸ்மாக்களை பெற்று, கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டில்லியில் கொரோனாவிலிருந்து மீண்ட போலீசார், பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து டில்லி போலீஸ் இத்திட்டத்தை துவக்கி உள்ளது.

டில்லியில், 84 சதவீத போலீசார் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் எனவும், மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்வது மற்றவர்களை ஊக்கப்படுத்தும் எனவும்டில்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். பிளாஸ்மா தானம் செய்து வரும் டில்லி போலீசாருக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'பிளாஸ்மா தானம் செய்து வரும் 'கொரோனா வாரியர்ஸ்' டில்லி போலீசாருக்கு எனது நன்றி. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், மாதத்திற்கு 2 முறை பிளாஸ்மா தானம் செய்யலாம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE