இந்தியா

நெருக்கடி: வருமான சான்றிதழ் கேட்டு மீன்வளத் துறை...தடைக்கால நிவாரணம் பெற்ற மீனவர்கள் கலக்கம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 நெருக்கடி: வருமான சான்றிதழ் கேட்டு மீன்வளத் துறை...தடைக்கால நிவாரணம் பெற்ற மீனவர்கள் கலக்கம்

புதுச்சேரி; வருமான சான்றிதழை வரும் 24 ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், இந்தாண்டு வழங்கிய மீன்பிடி தடைக்கால நிவாரணம் திரும்பி பெறப்படும் என்ற மீன் வளத்துறையின் சுற்றறிக்கையால் மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,500 வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மீனவர்கள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தடைக் காலம் மே 31ம் தேதியுடன் முடிவடைந்ததாக மத்திய அரசு அறிவித்தது.இதையொட்டி புதுச்சேரி மீனவர்கள் தங்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கான கோப்பு தயார் செய்து கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது முதியோர் ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என கவர்னர் மறுப்பு தெரிவித்தார்.இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அ.தி.மு.க. எம்.எல்.ஏ., க்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர்.கவர்னர் ஒப்புதல்இந்நிலையில் சட்ட விதிகளில் திருத்தம் செய்து, கடந்த காலங்களை போலவே இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை, மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.சுற்றறிக்கைஇந்நிலையில் மீன்வளத்துறை இந்தாண்டு மஞ்சள் ரோஷன் கார்டு மூலம் தடைக்கால நிவாரணம் பெற்றவர்களுக்கு அதிரடியாக வருமானம் சான்றிதழ் கேட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:மீன் வளத்துறையின் நலவழி பிரிவு மூலம் இந்தாண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை பெற்ற மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்கள், வருவாய் துறை வழங்கும் ஆண்டு வருமான சான்றிதழ் பெற்று, வரும் 24ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் தங்களுக்கு இந்தாண்டு வழங்கப்பட்ட மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை திரும்ப வசூலிக்கப்படும்.மேலும் மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு மழைக்கால நிவாரணம், சேமிப்பு மற்றும் துயர் துடைப்பு நிதியான புயல் பணம் பெறுவதற்கு தங்களின் பெயர் பரிந்துரைக்கப்படமாட்டாது. இது தொடர்பாக அனைத்து கிராம பஞ்சாயத்தார்கள், மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்வளத்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X