இந்தியா

கூட்டம் கூடுவதை தவிருங்கள் கவர்னர் வேண்டுகோள்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கூட்டம் கூடுவதையும், கொண்டாட்டங்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது சமூக வலைதள பதிவு:டாக்டர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள பொது சுகாதார மையம் மற்றும் மருத்துவமனைகளில் நோயைக் கட்டுப்படுத்த முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்களின் சிகிச்சைக்கான உரிய கவனிப்பை அரசு வழங்கும். நம்முடைய முயற்சிகளால் கோவிட் வைரசை துல்லியமாக கண்டறிந்து வெளியேற்ற முடியும். பொதுமக்கள் தங்களுடைய பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் சிறிது நாட்களுக்கு நாம் தவிர்க்க வேண்டும்.பொதுமக்களின் நலனுக்காக அவர்களை சந்திக்கும் அரசியல் தலைவர்கள் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேறு ஏதேனும் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றுவழி உள்ளதா என சிந்திக்க வேண்டும். மக்களும் தொழில்நுட்ப அறிவை கற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை காத்து சந்தையின் வழியாக பொருளாதாரம் மேம்பட வேண்டும்.நமது வாழ்வாதாரத்தை காப்பதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளதை நாம் உணர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X