இந்தியா

தொகுதி பிரச்னைகளுக்கு முன்னுரிமை தாருங்கள்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சட்டசபை கூட்டத் தொடரினை எதிர்கொள்ளுவது தொடர்பாக காங்., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று 20 ம்தேதி துவங்குகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை மனதில் வைத்து முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்பதால் இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே முடங்கியுள்ள நலத்திட்டங்கள், பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் போடாதது, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்காதது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப உள்ளன.இந்நிலையில் சட்டசபை கூட்டத் தொடரினை எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., முதல்வரின் பார்லிமெண்ட் செயலர் லட்சுமிநாராயணன், காங்., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பேசுகையில், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. தொகுதியில் மனைப்பட்டா தருவது உள்ளிட்ட பல பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதற்கு எல்லாம் முன்னுரிமை கொடுத்து இந்த பட்ஜெட்டில்செய்து தர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அதிகாரம் இல்லாத சூழ்நிலையில் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று போராட வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X