பொது செய்தி

தமிழ்நாடு

மின் விபத்தை தடுப்போம்! தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண் வெளியீடு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

உடுமலை:பருவ மழை முன்னெச்சரிக்கையாக, மின் விபத்துக்களை தடுக்கும் வகையில்,தகவல் தெரிவிக்க மின் வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது;தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் -ஆப்' எண் வெளியிடப்பட்டுள்ளது.உடுமலை மின் பகிர்மான வட்டத்திலுள்ள, உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்கள் உள்ளன.பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக, பழுதடைந்த மின் கம்பங்கள், வலுவிழந்த மின் கம்பிகள் மற்றும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் போன்றவற்றால் மின் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள்,மின் நுகர்வோர், பழுதான மின் கம்பங்கள், வலுவிழந்த மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் தெரிந்தால், 94421 11912 என்ற எண்ணுக்கு 'வாட்ஸ்-ஆப்' மூலம் தகவல் தெரிவிக்கலாம், என உடுமலைமின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர், தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.மேலும், பொதுமக்கள் மின் விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மழை காலத்தில் டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. நீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்கக்கூடாது.மின் கம்பத்தின் ஸ்டே கம்பி, மின் கம்பங்களை தொட வேண்டாம். வீட்டில், மின் சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், ரப்பர் செருப்பு அணிந்து கொண்டு, மற்ற "ஸ்விட்'சுகளை அணைத்து விட்டு, மின் வாரிய அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் நேரங்களில், 'டிவி' மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், மொபைல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது. கேபிள் வயரை துண்டிக்க வேண்டும்.அதே போல், மரங்கள், மின் கம்பிகள், உலோக கம்பி வேலி ஆகியவை இல்லாத பகுதியில், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம் உள்ள பகுதியில் ஒதுங்க வேண்டும்.கால்நடைகளை, ஸ்டே கம்பிகளில் கட்டக்கூடாது; ஈரமான கரங்களில், மின் சாதனங்களை தொடக்கூடாது.மின் விபத்து ஏற்பட்டால், உடனடியாக பேப்பர், எண்ணை போன்ற தீ பிடிக்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, கம்பங்கள் சாய்ந்திருந்தாலோ உடனடியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.மின் பாதைக்கு அருகில் கட்டடம் கட்டக்கூடாது; பழுதடைந்த மின் உபகரணங்களை உடனடியாக மாற்ற வேண்டும். கட்டட வேலை, மரங்கள் வெட்டும் போது கவனம் தேவை. மின் கசிவுதடுப்பான் அமைத்து, விபத்துக்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X