இந்தியா

டாஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சேதராப்பட்டு டாஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கிராமப்புற பள்ளிகளில் சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் 2019-2020ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 86 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு நுாறு சதவீதம் தேர்ச்சியை பெற்று தந்துள்ளனர்.மாணவி ஜெயா 600க்கு 565, சங்கீதா 558, சரண்யாதேவி 549 மதிப்பெண் பெற்று பள்ளி அளவி்ல முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.மாணவர் அருள்ரான் உயிரியல் பாடத்திலும், மாணவிகள் சூரியகலா, நான்சி ஆகியோர் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களில் 13 பேர் 500க்கு மேலும், 21 பேர் 450க்கு மேலும், 30 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்று கிராமப்புற பள்ளிகளில் முத்திரை பதித்துள்ளனர்.இதுகுறித்து பள்ளி முதல்வர் செல்வராஜ் கூறியதாவது:கிராமப்புற மாணவர்களுக்கான கல்விப்பணியில் எமது பள்ளி வெள்ளிவிழா கண்டுள்ளது. 26ம் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சியுடன், கிராமப்புற பள்ளிகளில் மாநில அளவில் உயர்ந்த மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும், ஆசிரியர்களின் அயராத உழைப்பாலும் இந்த வெற்றியை பெற்றுள்ளோம் என்றார்.சாதனை படைத்த மாணவ-மாணவிகள் மற்றும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் செல்வராஜ் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X