இந்தியா

கொரோனா தொற்று அதிகரிப்பு படுக்கைகளை அதிகரிக்க முடிவு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாநிலத்தில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அருண், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஒவ்வொரு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள், தற்போதுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் 600 படுக்கைககளில் 400 படுக்கைகள் நிரம்பி விட்டது. எஞ்சி படுக்கைகளும் சில தினங்களில் நிரம்பி விடும் . இதனால் மாநிலத்தில் பிற இடங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகள் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழக விடுதிகள், ஓட்டல்களை கோவிட் மருத்துவமனையாக மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.கவர்னருக்காக காத்திருந்த அமைச்சர்சுகாதார துறை வளாகத்தில் உள்ள கட்டுபாட்டு மையத்திற்கு இரண்டாவது நாளாக நேற்றும் கவர்னர் ஆய்வு நடத்த வர உள்ளார் என தகவல் பரவியது. இதனையறிந்த சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ், பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை காத்திருந்தார். கவர்னர் ஆய்விற்கு வராதது உறுதியானதை தொடர்ந்து அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X