பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே வர்த்தக வளர்ச்சி பிரிவு பாலக்காடு கோட்டத்தில் துவக்கம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பாலக்காடு ரயில்வே கோட்டத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள வர்த்தக வளர்ச்சி பிரிவில், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதி வர்த்தகர்கள், சரக்குகளை கொண்டு வரவும், அனுப்பவும் ரயில் வசதியை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில் சேவை வாயிலாக, சரக்கு போக்குவரத்தை எளிமைப்படுத்தி, தொழில் வளர்ச்சிக்கு துணை செய்யும் நோக்கில், பாலக்காடு கோட்டத்தில் வர்த்தக வளர்ச்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, வேளாண் உற்பத்தி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தொழிற்சாலை மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களை ரயிலில், கொண்டு வரலாம்; விரும்பும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.இதற்கு முன், அதிகளவிலான சரக்குகளை, தனி 'கூட்ஸ்' ரயிலை வாடகைக்கு எடுத்து கொண்டு வரும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த புதிய ஏற்பாடால், குறைந்த அளவிலான பொருட்களையும் அனுப்பலாம்.பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் பிரதாப் சிங் ஷாமி இந்த வர்த்தக வளர்ச்சி பிரிவை அமைத்துள்ளார். இதே போன்று, திருவனந்தபுரம், திருச்சி, சேலம், சென்னை மற்றும் மதுரை கோட்டங்களிலும் வர்த்தக வளர்ச்சி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிரிவின் கீழ், பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, பாலக்காடு, திருநாவாயா, திக்கோட்டி, எடக்கோடு, அங்காடிபுரம், நிலாம்பூர் ரோடு, கல்லாயி, வெஸ்ட் ஹில், வாலபட்டணம், நீலேஷ்வர், மங்களூரு சென்டரல், மங்களூரு போர்ட் ஆகிய ஸ்டேஷன்களில் பொருட்களை இறக்கி ஏற்றும் 'கூட்ஸ் ெஷட்' வசதி செய்யப்படும்.இந்த வசதி குறித்து மேலும் தகவல்களை அறிய, வர்த்தகர்கள், வர்த்தக பொருட்கள் போக்குவரத்து பிரதிநிதிகள், பாலக்காடு கோட்ட வர்த்தக வளர்ச்சி பிரிவு அலுவலர்களை, 0491 2556198, 97467 63956 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, பாலக்காடு கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X