இந்தியா

ராஜ்நிவாஸை கோவிட் மருத்துவமனையாக மாற்றலாம் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் யோசனை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பட்ஜெட் தாக்கல்செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் கவர்னர் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை குற்றவாளிகள் போல் நடத்தியது, அவர்களை சோர்வடைய செய்துள்ளது.இதனால் போராட்டம் ஈடுபட ஆலோசித்து வருவதாக கூறினர்.அவர்களிடம் நான், நீங்கள் கவர்னருக்கு சேவை செய்யவில்லை. புதுச்சேரி மக்களுக்குத்தான் சேவை செய்கின்றீர்கள். அவர் கடுமையாக நடந்து கொண்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். போராட்டம் எதுவும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.கொரோனா தடுப்புப் பணியை தன் மனம் போன போக்கில் மாற்றினால் புதுச்சேரி மக்களுக்கு தான் துன்பம் ஏற்படும். ஏற்கனவே கதிர்காமம் மருத்துவமனையில் 600 படுக்கைககளில் 400 படுக்கைகள் நிரம்பி விட்டது. இன்னும் சில நாட்களில் முழுவதும் நிரம்பி விடும்.இதனால் ஜிப்மரில் நோயாளிகளை அனுமதித்து கொள்ள கேட்டோம். ஜிப்மர் நிர்வாகம் மறுத்துவிட்டது. அதே கருத்தை கவர்னர் பிரதிபலிக்கிறார். ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரி மக்களுக்கு தானே இருக்கிறது. எனவே கவர்னர் கிரண்பேடி யார் என்பதை பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.புதுச்சேரி அரசை கலைக்க நினைத்தார், அது முடியாததால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார், அதுவும் நடக்காததால் நாளை (இன்று) பட்ஜெட் தாக்கல்செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.பட்ஜெட் போடாததால்முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கூட காலத்தோடு வழங்க முடியவில்லை, கடந்த 1ம் தேதியில் இருந்து ஒரு ரூபாய்கூட அரசால் செலவு செய்ய முடியாத நிலை உள்ளது.நான் சொல்லும் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றப்போவதில்லை என்பதற்காக கவர்னர் என்னை சந்திக்க அனுமதி மறுத்து வருகிறார். அவரது வலது, இடது பக்கம் இருப்பவர்கள் மூலம் தான் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், அதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் லஞ்சம் தர மாட்டேன்.ராஜ்நிவாஸை கோவிட் மருத்துவமனையாக மாற்றலாம். அவரது டிரஸ்ட்டுக்கு மறைமுகமாக ராஜ்நிவாஸில் இருந்து பணம் செல்கிறது. நான் ஊழலின்றி சுத்தமாக உள்ளேன். ராஜ்நிவாஸ் அதுபோல் இருக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X