இந்தியா

ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் செயல்

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுவை: பட்ஜெட்டில் கொரோனா தடுப்புக்கு தனி தலைப்பின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்த வேண்டிய அரசு அலட்சியத்துடன் நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரும், முதல்வரும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு சம்பந்தமாக அரசிடம் இதுவரை எந்த ஒரு ஒருங்கிணைப்பும் கிடையாது.சுகாதாரத்துறை அமைச்சர் ஊரடங்கு அமல்படுத்த கோருகிறார். முதல்வர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறார்.புதுச்சேரி மாநிலத்தை பற்றி கவலைப்படாமல், ராஜஸ்தான் மாநில காங். பிரச்னையை பேசுகிறார். சச்சின் பைலட்டை கட்சிக்கு வர அழைக்கும் முதல்வர், நீக்கப்பட்ட தனவேலுவை கட்சிக்கு அழைக்காதது ஏன். கட்சி பொதுச் செயலர் போல் இன்றி, முதல்வர் செயல்பாடு இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு ரூ.8400 கோடிக்கு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவே நிதி இல்லாத நிலையில் தற்போது ரூ.9000 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது, மக்களை ஏமாற்றும் செயல்.பட்ஜெட்டில் கொரோனா தடுப்புக்கு தனி தலைப்பின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும். தனி செயலர் தலைமையில் கொரோனா தடுப்பு பிரிவு உருவாக்கி, பிளாஸ்மா சிகிச்சை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை, தடுப்பு மருந்துகள் வழங்கல், புதிதாக டாக்டர், செவிலியர் நியமிக்க வேண்டும்.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு, மின்துறை தனியார் மயம் உள்ளிட்ட பிரச்சனை குறித்து பேச வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஜூலை-202016:38:40 IST Report Abuse
Baskar நாராயணசாமி முதல்வர் பதவிக்கே லாயக்கில்லாதவன். அவன் எங்கே மக்களை கவனிக்க போகிறான். இன்று பாருங்கள் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு கொடுக்கிறானாம் கொடுக்கட்டும் நல்ல செயல் தான். அதுவும் யார் பெயரில் கொள்ளை அடித்து இப்போ கடற்கரை ஓரத்தில் தூங்குகிறானே அவன் பெயரில். என் புதுவையில் எவ்வளவோ பெருந்தலைவர்கள் இருந்தனர் அவர்கள் பெயரை வைக்கலாமே. உதாரணத்திற்கு குபேர பாறுக்மரைக்காயர் வேங்கடசுப்ப ரெட்டியார் இன்னும் எவ்வளோவோ தலைவர்கள் உண்டு .இவர்களை எல்லாம் மறந்து விட்டானா இந்த நாரா. அடுத்த மாநிலத்தின் கொள்ளையனின் பெயரை வைக்க என்ன காரணம். எக்கசெக்கமாக பணத்தை ஸ்டாலினிடம் இருந்து வாங்கி இருப்பான். என் என்றால் கொள்ளைவழியாக வந்தவன் தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X