ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் செயல்| Dinamalar

இந்தியா

ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் செயல்

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share

புதுவை: பட்ஜெட்டில் கொரோனா தடுப்புக்கு தனி தலைப்பின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்த வேண்டிய அரசு அலட்சியத்துடன் நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரும், முதல்வரும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு சம்பந்தமாக அரசிடம் இதுவரை எந்த ஒரு ஒருங்கிணைப்பும் கிடையாது.சுகாதாரத்துறை அமைச்சர் ஊரடங்கு அமல்படுத்த கோருகிறார். முதல்வர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறார்.புதுச்சேரி மாநிலத்தை பற்றி கவலைப்படாமல், ராஜஸ்தான் மாநில காங். பிரச்னையை பேசுகிறார். சச்சின் பைலட்டை கட்சிக்கு வர அழைக்கும் முதல்வர், நீக்கப்பட்ட தனவேலுவை கட்சிக்கு அழைக்காதது ஏன். கட்சி பொதுச் செயலர் போல் இன்றி, முதல்வர் செயல்பாடு இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு ரூ.8400 கோடிக்கு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவே நிதி இல்லாத நிலையில் தற்போது ரூ.9000 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது, மக்களை ஏமாற்றும் செயல்.பட்ஜெட்டில் கொரோனா தடுப்புக்கு தனி தலைப்பின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும். தனி செயலர் தலைமையில் கொரோனா தடுப்பு பிரிவு உருவாக்கி, பிளாஸ்மா சிகிச்சை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை, தடுப்பு மருந்துகள் வழங்கல், புதிதாக டாக்டர், செவிலியர் நியமிக்க வேண்டும்.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு, மின்துறை தனியார் மயம் உள்ளிட்ட பிரச்சனை குறித்து பேச வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X