பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் 70 மி.மீ., மழை: அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 வால்பாறையில் 70 மி.மீ., மழை: அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

வால்பாறை:வால்பாறை நகரில், 70 மி.மீ., மழையளவு பதிவானது; அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.வால்பாறையில், தென்மேற்கு பருவமழை பெய்யும் நிலையில், மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக்டேம், 10 நாட்களுக்கு முன்பு நிரம்பியது.இந்நிலையில், நேற்று முன் தினம் காலை முதல், இரவு வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. கனமழையால் வால்பாறை காமராஜ்நகரில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் இந்த வழித்தடத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பெய்யும் மழையால், மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 455 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து, 54 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.இதனால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 105.84 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,318 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது.அணையில் இருந்து வினாடிக்கு, 925 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 19 நாட்களில் சோலையாறு அணையின் நீர்மட்டம், 34 அடி உயர்ந்துள்ளது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 26, வால்பாறை - 70, மேல்நீராறு - 18, கீழ்நீராறு - 24, காடம்பாறை - 3, பரம்பிக்குளம் - 6, துணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 15, சர்க்கார்பதி - 4, என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X