இந்தியா

கவர்னர் எங்களை செயல்பட விடுவதில்லை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

பாகூர்; கவர்னர் எங்களை செயல்பட விடுவதில்லை என அமைச்சர் கந்தசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கிருமாம்பாக்கத்தில், அரசு ஊழியர்கள் நல சங்கம் சார்பில், 'ஆங்கில திறனறிவு பயிற்சி' வகுப்பு துவக்க விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விழாவிற்கு சங்க செயலர் செல்வம் வரவேற்றார்.தலைவர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார்.மரக்கன்று நட்டு, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:கல்வி தான் சிந்தனையாளர்களையும், அறிஞர்களையும்உருவாக்குகிறது. இளைஞர்கள் அரசு நிதியை பெற்று தொழில் தொடங்க வேண்டும்.சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் நாராயணசாமி பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளார். அத்திட்டங்கள், காலத்தோடு ஏழை மக்களிடம் கொண்டு செல்ல, அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா நோயின் பாதிப்பை விட வறுமை தான் மக்களை அதிகமாக பாதிக்கிறது. மாநில அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. தற்போது கொரோனா. ஆனால். இதற்காக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை. மீதமிருக்கும் ஆறு மாதத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.காலியாக உள்ள 9000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை வருகிறது. கவர்னர் எங்களையும் செயல்பட விடுவதில்லை. அவரும் செயல்படுவதில்லை. கொரோனா காலத்தில் பட்டினிச்சாவு ஏற்படுகிறது என்றால் அதற்கு கவர்னர் தான் காரணம்.இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.உதவி நுாலக அதிகாரிகள் ஜெஸ்லின், கலியபெருமாள், கார்த்திகேயன், பழனிவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.பொருளாளர் விநாயகம் நன்றிகூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X