கனமழைக்கு வாய்ப்பு :காலநிலை மையம் அட்வைஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழைக்கு வாய்ப்பு :காலநிலை மையம் 'அட்வைஸ்'

Added : ஜூலை 19, 2020
Share

ஆனைமலை:பொள்ளாச்சியில், இந்த வாரம் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், பத்து மி.மீ., வரையில் மழையிருக்கும். ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் அதிகபட்சமாக, 38 மி.மீ., வரையில் மழை இருக்கும்.அதிகபட்சமாக, 22 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். ஐந்து மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்களுக்கு கட்டாயம் முட்டுக்கொடுக்க வேண்டும். நெல் நாற்றாங்காலில் இலைப்பேன் தாக்குதல் வர வாய்ப்புள்ளது. ஒரு லிட்டர் தண்ணீருடன், 0.5 கிராம் 'தையோமீத்தாக்சைம்' அல்லது 0.5 கிராம் 'இமிடாகுளோப்பிரிட்' கலந்து தெளிக்க வேண்டும்.நெல் நாற்றாங்காலில் பழுப்பு இலைப்புள்ளி மற்றும் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீரில், 'அசாக்ஸிடிரோபின்' ஒரு மில்லி அல்லது 'டிரைசைக்குளோசோல்' இரண்டு கிராம் கலந்து தெளிக்கலாம். ஆடிப்பட்டத்துக்கு கொடி வகை காய்கறிகள் விதைப்பு மேற்கொள்ள இது உகந்த தருணம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X