இந்தியா

முன்விரோதத்தில் வீடுகள் சூறையாடல் கர்ப்பிணி உட்பட மூவர் படுகாயம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ன்விரோதத்தில் வீடுகளை சூறையாடிய கும்பல் தாக்கியதில் கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.புதுச்சேரி உப்பளம், வாணரப்பேட்டை ராசுஉடையார் தோட்டம் மற்றும் பிரான்சுவாதோப்பு தரப்பினர்களுக்கு இடையே பொது பாதையை பயன்படுத்துவது தொடர்பாக சில வாரங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் பிரான்சுவாதோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் வீட்டின் அருகில் உள்ள பொது பாதையை சில தினங்களுக்கு முன் அதேபகுதியை சேர்ந்த ஒரு தரப்பு மூடியது. அதனை ஜெயராஜ் மற்றும் சிலர் தடுத்தனர். இதனால், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இந்த முன்விரோதம் காரணமாக வேலி அடைத்த தரப்பினர் 20 பேர் நேற்று காலை ஜெயராஜ், ரமணா, கிருஷ்ணராஜ் ஆகியோர் வீடுகளில் புகுந்து சூறையாடினர். தடுக்க முயன்ற ஜெயராஜ் காலில் வெட்டினர். மேலும், சிவக்குமார் என்பவரின் தாய் அந்தோணியம்மாள் அவரது மருமகளான ஏழு மாத கர்ப்பிணி தீபிகா ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். முன்னதாக திவாகர், சஞ்சய் ஆகியோரின் பைக்குகளை அடித்து நொறுக்கினர்.தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணி தீபிகா உள்ளிட்ட மூவரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து புகார் அளித்தும் ஒதியஞ்சாலை போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஆவேசமடைந்த பொதுமக்கள் கவர்னர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த பெரியக்கடை போலீ சார், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று பொதுமக்கள், தங்கள் புகார் மனுவை கவர்னர் மாளிகையில் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார், பிரான்சுவாதோப்பை சேர்ந்த அருண், ஜாக்சன், திலிபன், அஜித் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X