பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு நிலையம் மீண்டும் திறப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 தீயணைப்பு நிலையம் மீண்டும் திறப்பு

உடுமலை:உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கடந்த, 13ம் தேதி, தீயணைப்பு நிலையம் மூடப்பட்டு, குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அவர் குணமடைந்து திரும்பினார். அதே போல், அங்கு பணியாற்றிய அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லை என உறுதியானது. இதனையடுத்து, உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில், தற்காலிகமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையம், மீண்டும் பொள்ளாச்சி ரோட்டிலுள்ள நிரந்தர அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.தீ விபத்து மற்றும் அவசர அழைப்புகளுக்கு மட்டும் செல்ல வேண்டும்; மற்ற நேரங்களில் அலுவலர்கள் வெளியில் வரக்கூடாது. தீயணைப்பு நிலைய வளாகத்திலுள்ள குடியிருப்பு, வரும் 27ம் தேதி வரை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X