பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கியது.மடத்துக்குளம் புதியஆயக்கட்டு பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன்பு, பல நுாறு ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. 90 நாட்கள் கடந்த நிலையில், தற்போது வேடபட்டி உள்ளிட்ட பல இடங்களில், வெங்காயம் அறுவடை தொடங்கியுள்ளது.இதில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது, முதல் தரமான வெங்காயம், கிலோ, 25 முதல் 35 ரூபாய் வரையும், அதற்கு அடுத்த தரத்திலுள்ளது, ஒரு கிலோ, 15 முதல் 20 ரூபாய் வரையும் கொள்முதல் செய்யப்படுகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஒரு ஏக்கர் பரப்புக்கு, குறைந்தபட்சம், 5 டன் முதல் அதிகபட்சம், 7 டன் வரை மகசூல் கிடைக்க எதிர்பார்த்துள்ளோம். ஒரு கிலோ அதிகப்பட்சமாக, 35 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X