பொது செய்தி

தமிழ்நாடு

3வது வார முழு ஊரடங்கு; வெறிச்சோடிய ரோடுகள்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 3வது வார முழு ஊரடங்கு; வெறிச்சோடிய ரோடுகள்

பொள்ளாச்சி, உடுமலையில், முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டதால், வாகனங்கள், மக்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு, நடப்பு மாதத்தின், 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது.மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, உடுமலையிலுள்ள அனைத்துக்கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. உடுமலை நகரம் மட்டுமின்றி, புற நகர் பகுதி மற்றும் கிராமங்களுக்கு செல்லும் பிரதான ரோடுகளான, திருப்பூர் ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு என அனைத்து ரோடுகளும் வாகன போக்குவரத்து இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டன.தற்போது கொரோனா தொற்று, கிராம பகுதிகளிலும் பரவி வருவதால், கிராமங்களிலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இதனால், கிராமங்களும் அமைதியாக காணப்பட்டன.ஞாயிற்றுக்கிழமைகளில், இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூடும் நிலையில், நேற்று முழு ஊரடங்கு காரணமாக, நேற்றுமுன்தினம் இரவு, இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.பொள்ளாச்சிபொள்ளாச்சியில், நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வருவாய்துறை, போலீசார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோரை பிடித்து போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.கிருமிநாசினி தெளிப்புபொள்ளாச்சி நகராட்சிப்பகுதியில் கடந்த இரண்டு வாரமாக ஊரடங்கை பயன்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து, மூன்றாவது வாரமாக நேற்றும் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் நடைபெற்றன.சப் - கலெக்டர் வைத்திநாதன், கிருமிநாசினி தெளிப்பு பணியை துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் காந்திராஜ், தாசில்தார் தணிகைவேல், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வாகனங்கள், நகராட்சி வாகனங்கள் உள்பட, 10 வாகனங்களில், 36 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.உணவு வினியோகம்பொள்ளாச்சி மேற்கு எஸ்.ஐ., கார்த்திக்குமார் மற்றும் போலீசார், ஊரடங்கு காரணமாக உணவின்றி இருந்த ரோட்டோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினர். மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, பஸ் ஸ்டாண்ட், மாட்டு சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளோருக்கு உணவு வழங்கினர்.வால்பாறைவால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சந்தை நாளான நேற்று வால்பாறை காய்கறி மார்க்கெட், ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அம்மா உணவம் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு, நெகமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டும், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.கேரளா மாநில எல்லையில் உள்ள வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட் அடைக்கப்பட்டது. இவ்வழியாக கேரளாவில் இருந்து வாகனங்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை.நெகமம்அருகேயுள்ள காட்டம்பட்டியில், கிணத்துக்கடவு தாலுகா எல்லை செக்போஸ்ட்டில் போலீஸ் மற்றும் அரசு பணியாளர்கள் பணியில் இருந்து கண்காணித்தனர்.இவ்வழியாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. முழு ஊரடங்கில், பொதுமக்கள் வெளியே வராமல் முழு ஆதரவு அளித்தனர்.பைக்கில் 'மைக்' விழிப்புணர்வுமுழு ஊரடங்கில், கோட்டூர் பேரூராட்சி சார்பில், வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பேரூராட்சி பணியாளர்கள், நவீன முறையில் பைக்குகளில் வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.முக்கிய சந்திப்புகளில், முழு ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு செய்தனர். மருத்துவம், பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்குவோர் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டனர். சந்தைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கடை உள்ளிட்டவை இயங்கினால், உடனடியாக 'சீல்' வைக்கப்படுமென ஒலி பெருக்கியில் எச்சரிக்கை விடுத்தனர். - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X