பொது செய்தி

தமிழ்நாடு

தரமான விதை உற்பத்தி: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
உடுமலை:விதைப்பண்ணைகளில், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமான விதை உற்பத்தி மற்றும் விற்பனையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.உடுமலை, தாராபுரம் பகுதியிலுள்ள விதைப்பண்ணைகளை, கோவை விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் சுப்பையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.வெள்ளகோவில், அலங்கியம் பகுதியில், வேளாண் துறையால்
 தரமான விதை உற்பத்தி: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

உடுமலை:விதைப்பண்ணைகளில், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமான விதை உற்பத்தி மற்றும் விற்பனையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.உடுமலை, தாராபுரம் பகுதியிலுள்ள விதைப்பண்ணைகளை, கோவை விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் சுப்பையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.வெள்ளகோவில், அலங்கியம் பகுதியில், வேளாண் துறையால் அமைக்கப்பட்ட, சோளம் கோ 30 ரகம், பாசிப்பயிறு கோ 8 ரக ஆதார விதைப்பண்ணைகள் மற்றும் அங்கக சான்று விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார்.வயலாய்வு பணியை தொடர்ந்து, விதைச்சான்று அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது, விதை உற்பத்தி இலக்கு மற்றும் சாதனை விவரங்களை ஆய்வு செய்ததோடு, விதைப்பண்ணை பரப்பு, சான்று பணிகளை விரைந்து முடிக்கவும், இருப்பிலுள்ள வயல்மட்ட விதைகளை, சுத்திகரிப்பு பணி முடிந்து, மாதிரி ஆய்வு, சான்று பணியை முடிக்க அறிவுறுத்தினார்.விதை விற்பனை அதிகரித்துள்ள நிலையில், விதை விற்பனை நிலையங்களை அதிகளவு ஆய்வு செய்யவும், கொள்முதல் பட்டியல், இருப்பு பதிவேடு, தகவல் பலகை, விதை மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி, தரமான விதை விற்பனையை உறுதி செய்ய வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம், உதவி இயக்குனர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X