நகைக்கடன் வழங்குவதில் பாரபட்சம்! நடவடிக்கை உறுதியென அறிவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

நகைக்கடன் வழங்குவதில் பாரபட்சம்! நடவடிக்கை உறுதியென அறிவிப்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 19, 2020
Share
திருப்பூர்:'நகைக்கடன் விவ காரத்தில் விசாரணை நடத்தப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் நிறுத்தப்பட் டதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் பழனிசாமி, 'நகைக்க டன் நிறுத்தப்படவில்லை' எனக் கூறியுள்ளார்.கடந்த ஏப்., 1 முதல் ஜூன், 30 வரை வழங்கப்பட்ட நகைக்கடன் மற்றும் நிலுவையில் உள்ள நகைக்கடன் விவரங்களை, கூட்டுறவுப்பதிவாளர்
 நகைக்கடன் வழங்குவதில் பாரபட்சம்! நடவடிக்கை உறுதியென அறிவிப்பு

திருப்பூர்:'நகைக்கடன் விவ காரத்தில் விசாரணை நடத்தப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் நிறுத்தப்பட் டதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் பழனிசாமி, 'நகைக்க டன் நிறுத்தப்படவில்லை' எனக் கூறியுள்ளார்.
கடந்த ஏப்., 1 முதல் ஜூன், 30 வரை வழங்கப்பட்ட நகைக்கடன் மற்றும் நிலுவையில் உள்ள நகைக்கடன் விவரங்களை, கூட்டுறவுப்பதிவாளர் அலுவலகத்துக்கு, இன்றைக்குள் (20ம் தேதி) அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகையில், 'கூட்டுறவு வங்கிகளில், அவற்றின் நிதி நிலைமைக்கேற்ப, 20 லட்சம் ரூபாய்க்கு மிகாமல், நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பாரபட்சமாகவோ, தனிப்பட்ட நபர்களுக்கு அதிகளவோ கடன் வழங்கப்படுவதாக அறிந்தால், புகார் தெரிவிக்கலாம். 20 லட்சம் ரூபாய்க்கு மேலோ, குறைந்தளவு நகைக்கு அதிக தொகையோ கடன் வழங்கியிருந்தால், ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.புகார் உண்மையெனில், உரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும்' எனறனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X