இனி தாமதமாகாது! கொரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதம் தவிர்க்கப்படும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இனி தாமதமாகாது! கொரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதம் தவிர்க்கப்படும்

Added : ஜூலை 20, 2020
Share
திருப்பூர்:'கொரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதம் தவிர்க்கப்படும்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று, சமூக பரவல் நிலையை எட்டினாலும் கூட, அதை சமாளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர் மற்றும் மருத்துவ பணிகள் துறையினர் பணியாற்றி வருகின்றனர்.சிகிச்சையில் உள்ளவர்களை, குணமாக்கி, வீட்டுக்கு அனுப்புவதில்

திருப்பூர்:'கொரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதம் தவிர்க்கப்படும்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று, சமூக பரவல் நிலையை எட்டினாலும் கூட, அதை சமாளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர் மற்றும் மருத்துவ பணிகள் துறையினர் பணியாற்றி வருகின்றனர்.சிகிச்சையில் உள்ளவர்களை, குணமாக்கி, வீட்டுக்கு அனுப்புவதில் முனைப்புக்காட்டி வருகின்றனர். இவர்களுடன், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் களத்தில் சுழல்கின்றனர்.
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 200 படுக்கை வசதியுடன், கொரோனா வார்டு இயங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அங்கு, 131 பேர், தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாலுகா வாரியான கண்காணிப்பு மையங்களில், மாவட்ட நிர்வாகம் சார்பில், 356 படுக்கை வசதி, தனியார் மருத்துவமனைகளில், 1,257 படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளன.அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையத்தில், 137 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவைதவிர, கூடுதலாக சில இடங்களிலும் கொரோனா படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுக்க, 2,158 படுக்கை வசதி உள்ளன.
கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:கொரோனா பாதித்தவர்கள், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், கொரோனா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.மாவட்டத்தில் மட்டும், 23 'வென்டிலேட்டர்', 48 அவசர சிகிச்சை பிரிவு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கொரோனா தொற்று, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதால், இதுவரை, 'வென்டிலேட்டர்', அவசர சிகிச்சை, யாருக்கும் தேவைப்படவில்லை.
இன்று (நேற்று) காலை நிலவரப்படி, 137 பேர், நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்போ, அறிகுறியோ தென்பட்டால், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு, விரைந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலம், குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும்; தொற்றுள்ளவர்களும், விரைவில் குணமாகி வீடு திரும்பலாம்.
கொரோனா பரிசோதனை முடிவு தெரிவதில், காலதாமதம் ஏற்படுவதாக, புகார் உள்ளது. வரும் நாட்களில், பரிசோதனை முடிவுகள், 18 முதல், 20 மணி நேரத்தில் தெரியும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், சுகாதாரத்துறையினரின் வழிமுறைகளை பின்பற்றி, தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
''கொரோனா பாதிப்போ, அறிகுறியோ தென்பட்டால், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு, விரைந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும்''

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X