பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து: இந்திய நிறுவனங்கள் ஆர்வம்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
covid 19, corona vaccine, Indian pharma, COVID19 vaccine

புதுடில்லி: கொரோனா பரவலை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், ஏழு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்து விட்டது. சமீபகாலமாக, தினமும், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், இந்திய நிறுவனங்கள் உட்பட, சர்வதேச அளவில், பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்திய அளவில், 'பாரத் பயோடெக், ஷீரம் இன்ஸ்டிடியூட், ஜைடஸ் கெடிலா, பனேசியா பயோடெக், இந்தியன் இம்யுனோலாஜிக்கல்ஸ், மைன்வாக்ஸ், பயோலாஜிக்கல்' ஆகிய, ஏழு நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், அதை நான்கு கட்டங்களாக பரிசோதிக்க வேண்டும், பூனை, எலி, முயல் ஆகிய விலங்குகளிடம் மருந்தை செலுத்தி, முதலில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின், குறைந்த எண்ணிக்கையில் மனிதர்களிடம் செலுத்தி, மருந்தின் பாதுகாப்புத்திறன் பற்றியும், அதன் நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும் பரிசோதிக்கப்படும்.

தொடர்ந்து, பாதுகாப்பு பரிசோதனை, மனிதர்களிடம் பெரிய அளவில் செய்யப்படும், பின், பல தரப்பு மக்களுக்கு மருந்தை செலுத்தி பரிசோதிக்கப்படும். இதில், பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கெடிலா நிறுவனங்கள், மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனை கட்டத்துக்குச் சென்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202021:14:55 IST Report Abuse
Unmai Vilambi அதான் OXFORD யூனிவர்சிட்டி VACCINE கண்டு பிடித்து விட்டதே - அதை பயன் படுத்திக்கொள்ளாமல் இவர்கள் என்ன கண்டுபிடிக்கப்போகிறார்கள்?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-ஜூலை-202019:50:25 IST Report Abuse
S. Narayanan மருந்துக்காக மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் வாழ விரைந்து செயல் படுங்கள். நன்றி.
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
20-ஜூலை-202019:30:25 IST Report Abuse
Rajagopal அரசியலை தவிர்த்து, சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகள் கண்டிப்பாக மக்கள் நலனுக்காக உபயோகிக்க வேண்டும். மக்கள் உணவே மருந்து என்பதை உணர்ந்து துரிதமாக செயல் பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X