பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.வி., காலனியில் எக்கச்சக்கம் : கடும் கட்டுப்பட்டு மண்டலமானது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா தொற்று பரவலில், திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு எஸ்.வி., காலனி, மாவட்ட நிர்வாகத்துக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது.எஸ்.வி., காலனி கிழக்கில் உள்ள எட்டு வீதிகள், கொரோனா அபாயம் மிகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள, 4வது வீதியில் மட்டும், 27 பேருக்கு மேல் கொரோனா பாதித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரே நாளில், 41 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.கடந்த சில நாட்களாக, எஸ்.வி., காலனியில், கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவே இருப்பதால், ஒட்டுமொத்த மாநகராட்சி மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''ஒருவருக்கு பரிசோதனை முடிவு கிடைப்பதற்குள், குடும்பத்தினர் மற்றும் அருகில் வசிப்பவருக்கு தொற்று பரவிவிட்டது. பரிசோதனை முடிவு, விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். பொதுமக்கள், தேவையின்றி வெளியே வர வேண்டாம். எஸ்.வி., காலனியின் நான்கு வீதிகளை மூட, மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து, நோய் தடுப்புப்பணி, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X