பொது செய்தி

இந்தியா

தனியார் ரயில் இயக்கம்: 2023 முதல் துவக்கம்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Railway, Indian Railways, Private Train, தனியார் ரயில்

'வரும் 2023ம் ஆண்டு முதல், தனியாரால், ரயில் இயக்கப்படும் என்பதில் மாற்றமில்லை' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

'தனியாரால், 109 வழித்தடங்களில், 151 ரயில்கள், 2023 ஆண்டு ஏப்ரலில் இருந்து இயக்கப்படும்' என, இம்மாதம் 1ம் தேதி, ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்திருந்தார். 'இந்தியாவில், இயக்கப்படும், 2,800 ரயில் சேவையில், 5 சதவீதம் மட்டுமே தனியாருக்கு அளிக்கப்படும்' என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தனியாரால் ரயில்கள், 2024 மார்சில் இருந்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்த தகவல் தவறானது என, ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியார் ரயில்கள், மார்ச், 2024 முதல் இயக்கப்படும் என, தவறான தகவல் வெளியாகி உள்ளது. தனியார் ரயில் இயக்கத்துக்கான ஒப்பந்தங்கள், 2021, மார்ச் மாதம் இறுதி செய்யப்படும். தனியார் ரயில்கள், 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, இயக்கப்படும். இவ்வாறு, வாரியம் தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
20-ஜூலை-202021:43:26 IST Report Abuse
m.viswanathan ரயில்வே துறையில் திமிர் பிடித்து யூனியனை வைத்து கொண்டு வேலை செய்வோருக்கு இது பாடமாக இருக்கும்
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
20-ஜூலை-202016:21:39 IST Report Abuse
Arasu பொது மக்கள் குறிப்பாக சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஒருக்கு போவதை நிறுத்த வேண்டும் ...மோடி ஏழை மக்களை சாக அடிக்காமல் விட மாட்டார்
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
20-ஜூலை-202008:12:30 IST Report Abuse
Elango அதாவது எங்கள் ஆட்சி முடிவதற்குள் தனியார் அனுமதி தந்து விடுவோம் என்கிறார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X