பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் பதிவிறக்கலாம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;''பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என கல்லுாரி முதல்வர் (பொ) கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் கல்லுாரியில் விண்ணப்பம் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கல்லுாரியில் விண்ணப்பங்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து, 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்க கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.கல்லுாரி முதல்வர் (பொ) கிருஷ்ணராஜ் அறிக்கை:மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை பாரதியார் பல்கலை கழகத்தின், www.b---u.ac.in இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம், பி.பி.ஏ., பி.காம்., சி.ஏ.,; பி.காம்., தொழில்முறை கணக்குப்பதிவியல் (புரோபசனல் அக்கவுண்டிங்) ஆகிய பாடங்களுக்கு விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்துடன், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி இறுதி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றின் நகல் அல்லது இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை இணைத்து சமர்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, விரைவு அல்லது பதிவு தபாலில், முதல்வர், பாரதியார் பல்கலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, மகாலிங்கபுரம், பொள்ளாச்சி, 642002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.அல்லது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, கல்லுாரியின் buascpollachi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கல்லுாரிக்கு மாணவர்கள் நேரடியாக வருவதை தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படின் விண்ணப்பங்களை கல்லுாரியின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் சேர்க்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 04259 220335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை நாளை (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, கடைசி நாளான வரும், 4ம் தேதி மாலை, 3:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X