சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணுக்கு கொரோனா :குடியிருப்பு பகுதிக்கு 'சீல்'

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 பெண்ணுக்கு கொரோனா :குடியிருப்பு பகுதிக்கு 'சீல்'

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 26 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானதையடுத்து, அவரது வீடு உள்ள சரோஜினி வீதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி சரோஜினி வீதியை சேர்ந்த, 26 வயது பெண், கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பொள்ளாச்சி வந்தார். அவரது உறவினர் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.அதில், தொற்று உறுதியானதையடுத்து, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரை நாச்சிமுத்து பிரசவ விடுதியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரது வீடு உள்ள சரோஜினி வீதியை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றி, நகராட்சி அதிகாரிகள் தடுப்புகள் அமைத்தனர். அங்கு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவரது வீட்டில் உள்ள ஒன்பது பேருக்கு பரிசோதனை செய்யப்படும். அங்கு, இன்று மருத்துவ முகாம் நடத்தி சத்து மாத்திரை, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X